இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் தற்போது ரீடைல் சந்தையில் முக்கியமான வர்த்தகப் பொருளாக இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் இத்துறை வர்த்தகம் தொடர்ந்து சரிவது மட்டும் அல்லாமல் உற்பத்தியும் குறையும் நிலை உருவாகியுள்ளது.
நீயா நானா போட்டியில் ஜியோ, ஏர்டெல்.. வோடபோனின் பரிதாப நிலை?
கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ்
டி.வி., வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலைகள் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் 3 முதல் 5 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி பொருட்கள்
பிளாஸ்டிக் முதல் அலுமினியம் வரையில் அனைத்து முக்கிய உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்த நிலையில் உற்பத்தியாளர்கள் இந்த விலை சுமை மற்றும் விலை உயர்வை நுகர்வோராகி மக்களுக்குத் திருப்பிவிட முடிவு செய்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் முதல் ஹெட்போன் என அனைத்து நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை உயரும்.
டாலர் ஆதிக்கம்
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்கள் விலை உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் இத்தகையை முடிவை எடுத்துள்ளனர்.
சீனா
இதேவேளையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சீனாவின் முக்கிய நகரத்தில் கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஷாங்காய் துறைமுகத்தில் இயக்கம் குறைந்துள்ள காரணத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும், உதிரிப்பாகங்களும் இந்தியாவுக்கு வருவதில் தாமதமாகியுள்ளது.
மிடில் கிளாஸ் மக்கள்
ஏற்கனவே உணவு, உடை, இடம் (ரியல் எஸ்டேட்), எரிபொருல் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளதன் மூலம் இப்புதிய பாதிப்பு நடுத்தர மக்களே அதிகளவில் பாதித்து உள்ளது. மேலும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் சந்தை பெரிய அளவில் நடுத்தர மக்களைத் தான் நம்பி இயங்கி வருகிறது.
Consumer electronics price goes up by 5 percent Amid Input, Import gets costlier
Consumer electronics price goes up by 5 percent Amid Input, Import gets costlier கடைசியில் இதுவும் விலை உயர போகுது.. மடில் கிளாஸ் மக்கள் பாவம்..!