சிம்லா:
இமாச்சல பிரதேசத்தின் சிம்லா அருகே, ராம்பூர் புஷாஹர் பகுதியில் உள்ள காஷபாட் இணைப்பு சாலையில் கார் ஒன்று 100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. சிம்லா மாவட்டத்தின் பாத் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது அவர்களின் கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லதா தேவி (45), அவரது மகள் அஞ்சலி (22), மனோரமா தேவி (43) மற்றும் கிரிஷ் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும், கார் டிரைவர் அசோக் மற்றும் குல்தீப் ஆகியோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.