புர்ஜ் கலீஃபா முதல் அஸ்ஸாம் கப்பல் வரை.. ஷேக் கலீஃபா பின் சையத் ஆடம்பர சொத்துகள்..!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் உடல் நலக்குறைவால் 74 வயதில் காலமானார். மறைந்த ஷேக் கலீஃபா பின் சையத் கடந்த 2004 ஆம் ஆண்டு யுஏஇ அதிபரானார், இவரது தலைமையில் ஐக்கிய அரபு நாடுகள் பல முக்கிய வர்த்தக முடிவுகள் எடுத்ததில் பெரிய அளவிலான பலன் அடைந்துள்ளது.

பின்வாங்கிய எலான் மஸ்க்.. டெஸ்லா முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா..?!

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

ஷேக் கலீஃபா பின் சையத் மறைவு ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருக்கும மக்களுக்கு பெரும் இழப்பு. சமீபத்தில் விசா வழங்குவதில் தளர்வு, வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு இன்சூரன்ஸ் போன்றை இந்நாட்டு அரசு அறிவித்தது. ஷேக் கலீஃபா பின் சையத்-ன் சொத்து மதிப்பு தெரியுமா..?

18 பில்லியன் டாலர்

18 பில்லியன் டாலர்

ஷேக் கலீஃபா பின் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதியாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாகவும், அபுதாபியின் எமிராகவும் உள்ளார். கலீஃபா பின் சையத் பின் சுல்தான் அல் நஹ்யானின் நிகர சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலராகும்.

ஒட்டுமொத்தமாக, அல் நஹ்யான் குடும்பம் 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி
 

அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி

ஷேக் கலீஃபா பின் சையத் அபுதாபி நாட்டின் அரசு முதலீட்டு நிறுவனமான அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்த நிறுவனம் இந்தியா உட்பட உலக நாடுகளில் சுமார் 875 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களையும் முதலீடுகளையும் நிர்வாகம் செய்து வருகிறது.

உலகில் எந்த ஒரு அரசு நிறுவனமும் இவ்வளவும் பெரிய தொகையை கொண்ட முதலீட்டை நிர்வாகம் செய்வது இல்லை.

லண்டன்

லண்டன்

ஷேக் கலீஃபா பின் சையத் லண்டனில் சுமார் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடம்பர வீடுகளை வைத்துள்ளதாக பானாமா பேப்பர்ஸ் வெளியிட்டது. ஆனால் இந்த ரியல் எஸ்டேட் சொத்துகளை ஷேக் கலீஃபா பின் சையத் நேரடிாத தனது பெயரில் வைத்திருக்கவில்லை.

அஸ்ஸாம் கப்பல்

அஸ்ஸாம் கப்பல்

2013 ஆம் ஆண்டில், அஸ்ஸாம் என்று அழைக்கப்படும் ஒரு சூப்பர் யாட்ச் கட்டமைக்க உத்தரவிட்டார். இந்த ஆடம்பர கப்பல் சுமார் 590 அடி நீளம் கொண்டு உலகிலேயே மிக நீளமான மோட்டார் கொண்டும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மதிப்பு மட்டும் 600 பில்லயன் டாலர்.

புர்ஜ் கலீஃபா

புர்ஜ் கலீஃபா

உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் 163 மாடி கொண்ட புர்ஜ் கலீஃபா (2717 அடி அல்லது 828 மீ), ஷேக் கலீஃபா பின் சையத் அவர்களின் நினைவாக பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்

குடும்பம்

ஷம்சா பின்த் சுஹைல் அல் மஸ்ரூயி என்ற ஒரு பெண்ணை மட்டுமே ஷேக் கலீஃபா பின் சையத் மணந்தார். இவர்களுக்கு சுல்தான், முகமது, ஷம்மா, சலாமா, ஓஷா, ஷேக்கா, லத்தீபா மற்றும் மௌசா ஆகிய எட்டு குழந்தைகள் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sheikh khalifa bin zayed al nahyan net worth and priciest possession

sheikh khalifa bin zayed al nahyan net worth and priciest possession புர்ஜ் கலீஃபா முதல் அஸ்ஸாம் கப்பல் வரை.. ஷேக் கலீஃபா பின் சையத் ஆடம்பர சொத்துகள்..!

Story first published: Friday, May 13, 2022, 18:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.