காஷ்மீரி பண்டிட் அரசு ஊழியர் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
காஷ்மீரின் புத்கம் பகுதியில் காஷ்மீரி பண்டிட் அரசு ஊழியரான ராகுல் பட், நேற்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது கொலைக்கு நீதி கேட்டு உறவினர்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விமான நிலைய சாலை நோக்கி முன்னேறிய அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டினர்.