நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டதுடன், நேற்று (12) கொழும்பு பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண்களில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருந்தது.
இதன்படி, அனைத்து பங்குகளினதும் விலைச் சுட்டெண் 237.99 ஆக அதிகரித்து நேற்று 7754.62 ஆக பதிவாகியது.
இதேவேளை நேற்று (12) S&P Sri Lanka Twenty விலைச் சுட்டெண் 93.59 ஆல் அதிகரித்து காணப்பட்டது.