ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சர்வதேச நாடுகள் பலவும், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை விதித்துள்ளன.
இதனால் பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் ரஷ்யா, அதன் தாக்கத்தினை உணரத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்விப்ட் தடையை விதித்தன. இதனால் ரஷ்யா மிகப்பெரியள அளவிலான பண பரிவர்த்தனையை செய்ய முடியாமல் தவித்து வருகின்றது.
புர்ஜ் கலீஃபா முதல் அஸ்ஸாம் கப்பல் வரை.. ஷேக் கலீஃபா பின் சையத் ஆடம்பர சொத்துகள்..!
பல்வேறு தடைகள்
இதற்கிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு நாடுகள் ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுத்து வந்தாலும், இந்தியா ஆரம்பத்தில் இருந்தே நடு நிலையாக இருந்து வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க கூறினாலும், தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றது. அதோடு ரஷ்யாவுடனான வணிக நடவடிக்கைகளையும் தொடர்ந்து வருகின்றது.
இந்தியாவிடம் கோரிக்கை
மாறாக முன்பை விட இந்தியாவினை இன்னும் பல வகையிலும் சப்ளை செய்ய கோரி வருகின்றது. குறிப்பாக பல்வேறு உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் சப்ளைக்காக நாடியுள்ளது. அதோடு இந்தியாவுக்கும் ரஷ்யா தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யாவுக்கு இந்தியா பணம் செலுத்தும் முறையும், இந்தியாவுக்கு ரஷ்யா செலுத்தும் கட்டணத்தில் பெரும் பிரச்சனை எழுந்துள்ளது.
UAE- வழியாக பரிவர்த்தனை
இதற்கிடையில் தான் ரூபாய் – ரூபிள் பரிவர்த்தனை பற்றி இரு நாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில் இந்திய வணிகங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக ரஷ்யாவுக்கு பணம் அனுப்பும் திட்டத்தினை கையில் எடுத்துள்ளன. நேரடியாக ரஷ்யாவுடன் பரிவர்த்தனை செய்தால், தடை விதிக்கப்படலாமோ என்ற அச்சத்தின் மத்தியில், இந்திய நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பரிவர்த்தனை செய்ய நினைக்கின்றன.
ஏற்றுமதியாளர்களின் விருப்பம்
இது ஈரான் மீது அமெரிக்க தடை விதித்த காலகட்டத்தில் எப்படி பரிவர்த்தனை செய்தனவோ அதே போன்ற நடவடிக்கையினை தற்போது கையாளவே அதிகம் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக மொத்தத்தில் இந்திய நிறுவனங்கள் இந்த பரிவர்த்தனை முறையில் பரிவர்த்தனையின்போது, ரஷ்யா வெளிப்படையாக பணம் பெறுபவராக இருப்பதில்லை. இது தொடர்ந்து பல இடங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது. எனினும் பெரியளவில் இல்லை. ஆக இந்த பரிவர்த்தனையின் மூலம் ரஷ்யாவுக்கு எப்படி இறக்குமதி செய்வது என இந்திய இறக்குமதியாளர்கள் கவலையடைய தேவையில்லை என கூறப்படுகின்றது. எனினும் இதனை எப்படி ரஷ்யா பெறும் என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது.
எனினும் இது எந்தளவுக்கு சாத்தியம் என்ற கருத்துகளே பலரின் மத்தியிலும் கேள்வியாக எழுந்துள்ளது.
some Indian business take UAE route for Russian payments: check here details
In the midst of the embargo on Russia, some Indian businesses want to send money to Russia via the United Arab Emirates.