இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரம சிங்கேவை, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்துப் பேசினார்.
நேற்று பிரதமராக பெறுப்பேற்ற பின் பேசிய ரணில், இந்தியா உடனான உறவை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல் வெளிநாட்டு தூதராக இந்தியாவின் கோபால் பாக்லே, கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலை குறித்து அவர்கள் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே புதிய பிரதமராக ரணில் பொறுப்பேற்றதை தொடர்ந்து, இலங்கை ரூபாய் மதிப்பு சற்று உயர்வடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு நேற்று 380 ரூபாய் வரை சரிவடைந்த நிலையில், இன்று 365 ரூபாய்க்கு வர்த்தகமானது