அன்றாட அரசியல் நிகழ்வுகளை கிண்டல் கூர்மையாகவும் விமர்சனம் செய்ய இன்றைய சமூக ஊடக கால நெட்டிசன்கள் மீம்ஸ்களை ஏவுகணைகளைப் போல பயன்படுத்துகிறார்கள். இந்த மீம்ஸ்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதோடு அரசியல்வாதிகளை நோக்கி சாட்டையை சுழற்றுகிறது.
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சசிகலா, அரசியல் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். மேலும், அதிமுக தொண்டர்கள் எங்களுடன்தான் உள்ளனர் என்று கூறியது குறித்து ட்விட்டர் பயனர் மயக்குநன், உங்க கூட ஆடியோவில் பேசியதால், கட்சியை விட்டு நீங்கப்பட்டவங்களைச் சொல்றீங்களா சின்னம்மா? என்று கேட்டு மீம்ஸ் மூலம் கம்மெண்ட் அடித்துள்ளார்.
அரசியல் மீம்ஸ்கள்தான் அனல் பறக்கிறது என்றால், அனல் பறக்கும் கோடை வெயிலுக்கே மீம்ஸ் போட்டிருக்கிறார்கள் நம்ம ஊர் மீம்ஸ் கிரியேட்டர்கள். அலெக்ஸ் என்ற ட்விட்ட பயனர், வடிவேல் குரலில், “கேவலம் இந்த ரெண்டு நாள் மழை காண்டி இந்த சூனா பானாவ… போறவன் வரவன் எல்லாம் கலாய்ச்சிட்டு போறானுங்க…” அனல் வெயிலை அனைக்கும் சிரிப்பு மழை மீம் போட்டிருக்கிறார்.
அனல் பறக்கும் வெயிலை மட்டுமல்ல, குளுகுளு ஊட்டியை விட்டுவைக்கவில்லை நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள். எனக்கொரு டவுட்டு!? என்ற பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் பயனர், “எல்லா ஊரும் இப்போ ஊட்டி மாதிரி இருக்கு அப்போ ஊட்டி எப்டி இருக்கும். ஊட்டி மாதிரி இருக்கும்” என்று மீம்ஸால் ஊட்டியைக் கலாய்த்துள்ளனர்.
சென்னையின் எளிய மக்கள் பேசும் மெட்ராஸ் பாஷையை, பலரும் சென்னை வட்டார வழக்கு என்று சொல்வதை கண்டிக்கும் விதமாக, “கொய்யால் அது மெட்ராஸ் பாஷைடா” என்று மீம்ஸ் மூலம் குட்டு வைத்து சுட்டிக்காட்டியுள்ளனர்.
கவின் என்ற ட்விட்டர் பயனர், சாலையில் போலீசாரிடம் வம்பு செய்யும் ஒரு இளைஞர் படத்தை மீம்மாக போட்டு, “உரிமை மறுக்கப்படும்போதுதான் அயல் நாட்டுல அடிமையாக்கப்படுறேன்” என்று மீம்ஸ் செய்துள்ளார்.
திமுக அரசு நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு, நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “ஆமா சம்பந்தி” என்று வி.கே.ராமசாமி மீம் படத்தை போட்டு கலாய்த்துள்ளார்.
“அடுத்த பத்தாண்டுகளில் திமுக அழியும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, முந்தாணை முடிச்சு பாக்கியராஜ் – தவக்களை மீம் போட்டு, “உங்க தாத்தா காலத்துல இருந்து இதைத்தான் சொல்லிகிட்டு இருக்காங்க.. போய் அப்படி பேசுனவங்க வரலாறு எல்லாம் என்னாச்சுனு பாத்துட்டு வந்து பேசு அண்ணாமலை” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.
சவுக்கு சங்கர், முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்துள்ள மீம்ஸில், தேசிங்கு ராஜா படத்தில் ரவி மரியானிடம் சூரி சொல்வதாக, “ஷவர்மா தடை, பல்லக்கு அனுமதி, மகாவீர் ஜெயந்தி கறிக்கடை அடைப்பு, மாட்டுக்கறி பிரியாணி மறுப்பு, ஆவடியில் பசுமடம்” என்று கூறுகிறார். அதற்கு ரவி மரியா, “எங்க மாப்ள, உத்தர் பிரதேசத்துலயா?” என்று கேட்கிறார்.
அதற்கு சூரி, “இல்ல மாமா, நம்ம “திராவிட மாடல்” தமிழ்நாட்டில மாமா” என்று கம்மெண்ட் அடிப்பதாக உள்ள மீம்ஸ் திமுக அரசை விமர்சிப்பதாக உள்ளது.
பாஜக கூட்டம் குறித்து மார்க்2காளி என்ற ட்விட்டர் பயனர், முன்பக்கமா பார்த்தா ரெண்டு கிலோ மீட்டருக்கு கூட்டம் தெரியுது. பின்னாடி பார்த்தா 100 மீட்டர்ல ஸ்டேஜ் தெரியுது… யோவ் சங்கி என்று அண்ணாமலையை டெக் செய்து அப்படி என்னதாய்யா ட்ரெயினிங் குடுத்தாய்ங்க?” என்று கலாய்த்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும் என்று அண்ணாமலை கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, சாவித்திரி என்ற டிவ்ட்டர் பயனர், “தமிழ்நாடு தனிநாடு இல்லயா… தமிழ்நாடு பாதிச்சா இந்தியாவும்தான் பாதிக்கும்.. 21 மாநிலங்களை விட தமிழ்நாடு கொடுக்கிற ஜிஎஸ்டி அதிகம். கொஞ்சமாவது ஐபிஎஸ் படிச்ச்வன் மாதிரி பேசு” அண்ணாமலை என்று அறிவுரை செய்து மீம்ஸ் போட்டுள்ளனர்.
கைலாசா அதிபர் என்ற ட்விட்டர் பயனர், நாதக சீமான் – எல்.டி.டி.இ பிரபாகரன் முகங்களை வைத்து மீம்ஸ் போட்டு, “குருநாதா பசிக்குது குருநாதா, ஆமைக்கறி எங்க குருநாதா?” என்று கிண்டல் செய்துள்ளனர்.
இப்படி இன்றைய அரசியல் மீம்ஸ்களையும் கொஞ்சம் ஜாலியான மீம்ஸ்களையும் இங்கே தொகுத்து தருகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“