ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, டைன் அவுட் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டைன் அவுட் நிறுவனம், 20 நகரங்களில், 50 ஆயிரம் பிரபல ரெஸ்டாரண்ட்களில் டெபிள் புக் செய்யும் சேவையை வழங்கி வருகிறது. 2014-ம் ஆண்டு டைன் அவுட் நிறுவனத்தை டைம்ஸ் இண்டர்னெட் நிறுவனம் வாங்கியது.
தனி மரமாக விடப்பட்ட ரஷ்யா.. தோள் கொடுக்கும் இந்திய வர்த்தகர்கள்.. எப்படி தெரியுமா?
ஸ்விகி & ஜொமாட்டோ
ஆன்லைன் மற்றும் மொபைல் செயலி மூலம் ரெஸ்டாரன்ட்களில் இருந்து உணவுகளை வீட்டிற்கே டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது ஸ்விகி. அதன் போட்டி நிறுவனமான ஜொமாட்டோ உணவு டெலிவரி மற்றும் ரெஸ்டாரன்ட் புக்கிங் சேவையை வழங்கி வருகிறது.
இணைவு
ஸ்விகி நிறுவனத்தில் ஏற்கனவே இந்தியா முழுவதிலும் உள்ள 520 நகரங்களில் 1,90,000 ரெஸ்டாரன்கள் இணைந்துள்ளன. இப்போது டைன் அவுட் வசம் உள்ள 50 ஆயிரம் ரெஸ்டாரன்ட்களும் ஸ்விகியோடு கூட்டு சேர்ந்து அதன் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
ஜொமாட்டோ
அதுபோலவே ஸ்விக் நிறுவனத்தாலும் டைன் அவுட் தொழில்நுட்பத்தை அணுகி ரெஸ்டாரன்ட் புக்கிங் சேவையை வழங்க முடியும். இதன் மூலம் ரெஸ்டாரண்ட் புக்கிங் சேவையிலும் ஜொமாட்டோ நிறுவனத்துக்கு பெரும் போட்டியாக ஸ்விகி உருவாகும்.
தனி நிறுவனங்கள்
டைன் அவுட் நிறுவனத்தை வாங்கினாலும், இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாகவே செயல்படும் என தெரிவித்துள்ளது.
முக்கிய வணிகங்கள்
ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் பெறும் ஆர்டர்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியாததால், அண்மையில் ஜீனி என்ற சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது ஸ்விகி. அதுமட்டுமல்லாமல் ஸ்விகி நிறுவனம் இன்ஸ்டா மார்ட் என்ற பெயரில் 28 நகரங்களில் மளிகை பொருட்களை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது.
என்ன விலை?
ஸ்விகி நிறுவனம் டைன் அவுட் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து இருந்தாலும் என்ன விலைக்கு அதை வாங்க உள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் இதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என இந்திய மதிப்பில் 1,511 கோடி ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு ஸ்விகி நிறுவனம் 1.25 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்ற பிறகு, 10.7 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியன் டெக்காகார்ன்ஸ் பட்டியலில் இணைந்துள்ளது.
டெக்காகார்ன்ஸ் என்றால் என்ன?
ஒரு பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன்ஸ் எனவும், 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டார்டப் நிறுவனங்கள் டெகாகார்ன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
பைஜூஸ்
இந்திய ஸ்டார்ட்அப்களில் டெக்காகார்ன்ஸ் பட்டியலில் இப்போதைக்கு பைஜூஸ் மற்றும் ஸிவிக் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. முன்ந்தாக அதில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் இருந்தது. ஆனால் வால்மார்ட் ஃபிளிப்கார்ட்டை வாங்கிய பிறகு அதிலிருந்து வெளியேறியது.
Food Delivery Platform Swiggy acquires restaurant booking platform Dineout For Rs 1511 Crore
Food Delivery Platform Swiggy acquires restaurant booking platform Dineout For Rs 1511 Crore | ஜொமாட்டோவுக்கு போட்டியாக டைன்-அவுட் நிறுவனத்தை வங்கிய ஸ்விகி!