ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான். இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுடன் எப்போதும் இருக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ” ஷேக் கலீஃபா பின் சயீத் அல்-நஹ்யானின் குடும்பத்தினருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விரைவான வளர்ச்சியைக் கொண்டு வந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக அவர் அன்புடன் நினைவுக்கூரப்படுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்