டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் உள்ள கட்டடத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், 24 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
டெல்லி முண்டகா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் மூன்று தளங்களில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கட்டுப்படுத்த முயன்றனர்.