உக்ரைனில் முதல் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் ரஷ்ய வீரர்: அவர் செய்த குற்றம்?

உக்ரைனில் முதல் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார் ரஷ்ய வீரர் ஒருவர்.

உக்ரைனில் 62 வயது முதியவரை தலையில் சுட்டுக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட 21 வயது ரஷ்ய வீரர் தற்போது போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நிராயுதபாணியான முதியவரை Vadim Shyshimarin என்ற அந்த ரஷ்ய வீரர் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இராணுவ டாங்கி பிரிவை சேர்ந்த அந்த வீரர் சம்பவத்தின் போது திறந்திருந்த கார் ஜன்னல் ஊடாக துப்பாக்கியால் முதியவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

உக்ரைனில் முதல் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் ரஷ்ய வீரர்: அவர் செய்த குற்றம்?

நேட்டோவில் இணைவதா? இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா

ரஷ்ய படையெடுப்பு முன்னெடுக்கப்பட்ட முதல் வாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் Solomyanskyy மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியுள்ளது.

குறித்த இராணுவ வீரர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவர் ஆயுள் வரையில் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

உக்ரைனில் முதல் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் ரஷ்ய வீரர்: அவர் செய்த குற்றம்?

ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி ஆயிரக்கணக்கான உக்ரேனிய குடிமக்களை கொன்று, சித்திரவதை செய்து, துஷ்பிரயோகம் செய்ததாக உக்ரைனின் மூத்த சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், Mikhail Romanov என்ற ரஷ்ய வீரர் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் முதல் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் ரஷ்ய வீரர்: அவர் செய்த குற்றம்?

உக்ரைனில் முதல் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் ரஷ்ய வீரர்: அவர் செய்த குற்றம்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.