அரசு வேலை வாங்கிதருவதாக கூறி 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை, விஸ்வனாதபுரத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் மதுரை மத்திய குற்றபிரிவு காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தணிக்கை அலுவலகம் நடத்தி வரும் என்னிடம் மதுரையை சேர்ந்த ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ரேணுகா ஆகிய இருவரும் நட்பாக பழகி வந்தனர். அவர் என்னிடம் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமியின் மகனுடன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும் திமுகவில் மிக முக்கிய பொறுப்புகள் வகித்து வருவதாகவும், தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறி வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, 47,26,000 ரூபாயை என்னிடம் வாங்கினார்.
ஆனால், வேலைவாங்கி தராததால் பணத்தை திரும்பகேட்டேன் அதற்கு அவர் மறுத்து மிரட்டல்விடுத்தார் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காஅவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ரேணுகா கைது செய்தனர்.