வன்முறையற்ற அகிம்சை ரீதியான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நண்பர்களாக ஒன்றினைந்து மட்டக்களப்பில் பிரார்த்தனை நடைபவணி இன்று (13) திகதி இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுக்கப்பட்டது.
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்த குறித்த பிரார்த்தனை நடைபவணி அமைதியான முறையில் மட்டக்களப்பு நகர மத்தியில் உள்ள காந்தி பூங்காவை சென்றடைந்தது.
நடைபவணி காந்தி பூங்காவை சென்றடைந்ததும், நடை பவணியில் கலந்துகொண்டவர்கள் தமது ஆடைகளில் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தியிருந்த பல்வேறு அம்ச கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை காந்தி அடிகளின் சிலை அமைந்துள்ள வளாகத்தில் காட்சிப்படுத்தியதுடன், சுடர் ஏற்றி, சில நிமிடங்கள் அமைதியான முறையில் பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள குறித்த பிரார்த்தனை நடைபவணியில் இரண்டாம் நாள் நடைபவணி இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.