பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மகள்கள் இருவரையும் சொந்தயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலுள்ள அப்துல்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 48 வயதான பெண் தனது 50 வயது கணவர்மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தங்களுக்கு 5 மகள்கள் இருப்பதாகவும், அதில் இருவர் திருமணமாகி சென்றுவிட்டதாகவும், ஒருவருக்கு 18 வயது ஆகிறது எனவும், மற்ற இரண்டு மகள்கள் மைனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதில் சில மாதங்களுக்கு முன்பு 18 வயது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியபோது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என தனது மனைவிக்கு உறுதியும் அளித்திருக்கிறார். அதன்பிறகு அந்த மகளுக்கு திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். இதனால் நிலைமை சரியாகும் என்று நினைத்த மனைவிக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதன்பிறகு கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு 18 வயது மகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் வீட்டில் அனைவருடனும் பேசுவதையும் தவிர்த்திருக்கிறார். ஏன் இப்படி இருக்கிறாய்? என்று தாயார் பலமுறை கேட்டும் பதில் எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் கர்ப்பமான தனது மற்றொரு மகளை பார்ப்பதற்காக தாயார் வெளியூர் சென்றிருக்கிறார். அப்போதுதான் தனது இளைய மகளின் சோகத்திற்கான காரணம் தெரியவந்திருக்கிறது. தனது 18 வயது மகளை தந்தை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதை மூத்த மகள் தாயாரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தனது கணவனிடம் கேட்டபோது மிரட்டியிருக்கிறார். அதையும் மீறி அந்த பெண் தற்போது புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின்பேரில், 50 வயது தந்தைமீது இந்திய சட்டப்பிரிவுகள் 376(2)எஃப், 376 ஏ மற்றும் 506-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM