சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பு அளிக்க ஜகன்நாதன் தலைமையில் குழுவும், பயண திட்டங்களை வகுக்க கோபால் தலைமையில் குழுவும், தொடக்க மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகளுக்கு கார்த்திகேயன் குழுவும், பாதுகாப்புக்கு சைலேந்திர பாபு தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. மொத்தம் 18 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது