ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு என்ன நோய் என்பது தொடர்பில் இரகசியத்தை உடைத்துள்ளார் அவருக்கு மிக நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரத்தப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவர் இரகசியத்தை உடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்புடைய கோடீஸ்வரரின் பெயர் வெளியிடப்படவில்லை எனவும்,
மார்ச் மத்தியில் தொடர்புடைய சம்பவம் குறித்து விவாதிக்கப்படும் சூழலில் அந்த கோடீஸ்வரர் தமது கருத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில், ரஷ்யாவின் பொருளாதாரம் மட்டுமின்றி, உக்ரைன் உட்பட உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் விளாடிமிர் புடின் சீரழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்தம் பேதலித்த ஒருவரால் உலகை தலைகீழாக மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு மொத்த காரணம் புடின் தான் என்றார்.
ரஷ்யாவின் 200 முதன்மை கோடீஸ்வரர்களில் ஒருவரான அந்த நபர், தற்போது ரஷ்யாவுக்கு வெளியே குடியிருந்து வருகிறார்.
மேலும், விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான 20 அல்லது 30 நபர்களில் அவரும் ஒருவர். மொத்தம் 11 நிமிடங்கள் பதிவாகியுள்ள ஒடியோவில், மேற்கத்திய நாடுகளின் தடைகளிலிருந்து ஐரோப்பாவில் தனது முதலீடுகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என அந்த கோடீஸ்வரர் வினவியபடியே இருந்துள்ளார்.
ஆனால், விளாடிமிர் புடினை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ள அவர், விளாடிமிர் புடின் புற்றுநோயால் இறப்பது உறுதி அல்லது அரசியல் நெருக்கடி காரணமாக அவர் வெளியேற்றப்படுவார் என தாங்கள் அனைவரும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.