அமெரிக்காவில் சாகசக் கலைகளில் ஈடுபடும் காதல் ஜோடி ஒன்று தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த எண்ணி, உடலில் தீ வைத்து பங்கேற்றனர்.
சாகசக் கலைஞர்களான கேப் ஜெசாப் – ஆம்பிர் பாம்பிர் காதல் ஜோடி தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்த இந்த காதல் ஜோடி, முதுகு பகுதியில் தாங்களே தீயை பற்ற வைத்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்த நிலையில், சிறிது நேரத்தில் பின்னால் நடந்து வந்த இருவர் தீயணைப்பு கருவிகளை வைத்து தீயை அணைத்தனர். இந்த விபரீத சாகசத்தை செய்த காதல் ஜோடி முறையாக பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.