மதுரையில் தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் இருசக்கர வாகனத்தை இளைஞன் ஒருவன் தீ வைத்துக் கொளுத்திய நிலையில், பக்கத்தில் நின்றிருந்த 4 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின.
தெப்பக்குளம் பகுதியில் வீடு ஒன்றின் முன்பு நின்றிருந்த 5 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தன. சிசிடிவி காட்சிகளை வைத்து வாகனங்களுக்குத் தீ வைத்த ஜெய்சூர்யா, செல்வகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஜெய்சூர்யா ஒருதலையாகக் காதலித்து வந்ததும் மாணவி அவனது காதலை ஏற்க மறுத்ததால் அவரது இருசக்கர வாகனத்தைக் தீ வைத்துக் கொளுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. மாணவியின் வாகனத்தில் இருந்து பரவிய தீ பக்கத்தில் நின்றிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கியுள்ளது.