இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் நோக்கோடு ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவி வழங்கும் நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கான சீனத் தூதுவரைச் (Yi Xianliang) சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை பற்றி விளக்கமளித்தார்.இலங்ககைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் இதன் போது உறுதியளித்தார்.
ஜப்பான், அமெரிக்கா. இந்தியா ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகளையும் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கைக்கு உதவிகளை வழங்குவது பற்றி கலந்துரையாடுவதற்காக ஜப்பான் தூதுவர் (Mizukoshi Hideaki ) நாளை ரோக்கியோ செல்லவிருக்கிறார்.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்காக இலங்கை வரவிருக்கிறார்கள்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுடன் (Sarah Hulton) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசிமூலம் கலந்துரையாடியுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பாக சிரேஷ்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களை குறைப்பதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளோடு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.