மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆயுதப்படை காவலரான தனது கணவருடன் சேர்த்து வைக்கும்படி பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மதுரை ஆயுதப்படையில் பணியாற்றும் மகாராஜன் – பபினா தம்பதி கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி ஏடிஎஸ்பி அலுவலகத்தில் பபினா புகாரளித்த நிலையில், அதுகுறித்து விசாரிக்குமாறு உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் இதுவரை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து பபினா தர்ணாவில் ஈடுபட்டார்.