சமீப காலமாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் மனதை மருளச் செய்யும் ஆப்டிகல் இலுசியன் படங்கள் மூளைக்கும் கண்ணுக்கு வேலை அளிப்பதாக மட்டுமல்லாமல் அதில் முதல்பார்வையில் தெரியும் காட்சி ஆளுமைக் குறிப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். இந்த படத்தில் உங்களுக்கு தெரிவது நாய் தலையா? பூனை வாலா? என்று சொல்லுங்கள் உங்கள் ஆளுமையை செக் பண்ணுங்க…
தமிழ்நாட்டில் மாநகரங்களில், நகரங்களில், கிராமங்களில், சாலையோர கிளி ஜோசியம் பிரபலமானது. கூண்டில் இருக்கும் கிளி வெளியே வந்து, கிளி ஜோசியம் கூறுபவர் வைத்திருக்கும் கட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு அவர் கொடுக்கும் ஒரு நெல்லை வாங்கிக்கொண்டு மீண்டும் கூண்டுகுள் சென்றுவிடும். அந்த கிளி ஜோசியக்காரர், கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் உள்ள படத்தை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்வார். அப்படி, சமூக ஊடகங்களின் காலத்தில், இந்த ஆப்டிகல் இலுசியன் படதில் உங்களுக்கு தெரிவதென்ன இதுதான் உங்கள் ஆளுமை என்று கூறுவது கிட்டத்தட்ட ஒரு கிளிஜோசியம்தான். ஆனால், கிளி ஜோசியம் இல்லை. இது ஒரு ஆப்டிகல் இலுசியன் கணிப்பு.
பொதுவாக ஆப்டிகல் இலுசியன் படங்களைப் பார்த்து பலரும் தங்களின் ஆளுமையை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். இதோ உங்களுக்காக ஒரு ஆப்டிகல் இலுசியன் படம், இதில் உங்களுக்கு முதல் பார்வையில் தெரிவது நாய் தலையா? பூனை வாலா? என்று கூறுங்கள் உங்கள் ஆளுமை மற்றும் குண நலனைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில் முதலில் நீங்கள் நாய் தலையைப் பார்த்தால், நீங்கள் நட்பானவராகவும் கலகலப்பானவராகவும் இருப்பீர்கள். நீங்கள் மற்றவர்களால் சீக்கிரம் எரிச்சலடைய மாட்டீர்கள், நீங்கள் இனிமையாகவும் அக்கறையுடனும் இருப்பீர்கள்.
அதுவே முதல் பார்வையில் உங்களுக்கு இரண்டு பூனைகள் வாலைத் தொடுவது போல தெரிந்தால், நீங்கள் அதிக அறிவாளியாகவும் உள்ளார்ந்த சிந்தனையுடனும் இருப்பீர்கள். அதே நேரத்தில், நீங்கள் திறந்த மனதுடன் நுண்ணுணர்வு மிக்கவராக இருப்பீர்கள்.
இப்போது சொல்லுங்கள் இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில் நீங்கள் முதலில் பார்த்தது நாய் தலையா? பூனை வாலா? அவை குறிப்பிடும் உங்கள் ஆளுமை சரியா என்று செக் பண்ணுங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“