கீவ்,
உக்ரைனில் போர் தொடுத்துள்ள ரஷியா தற்போது கிழக்கு பிராந்தியமான டான்பாசில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் பிப்ரவரி முதல் இதுவரை உக்ரைனில் மொத்தம் 570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை குறிவைத்து ரஷிய துருப்புகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், பிப்ரவரி 24-ல் படையெடுப்பு தொடங்கியது முதல் 570 சுகாதார மையங்களும் 101 மருத்துவமனைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் ரஷியாவின் இந்த செயல் முட்டாள்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் என்றும் குற்றஞ்சாட்டினார்.