டெல்லி முண்டக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிகக்கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று மாலை மேற்கு டெல்லியில் உள்ள முண்டக் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நடந்த அந்த தீ விபத்தை அணைக்க, சுமார் 24 தீயணைப்பு குழுவினர் போராடி வருகின்றனர். இன்று மாலை சுமார் 4.40 அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மூன்றடுக்கு வணிகக்கட்டடமான அதிலிருந்து, சுமார் 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் தீயணைப்பு துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். சுமார் 10 பேர் வரை கட்டடத்துக்குள் சிக்கியிருக்கலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளின்படி, முதல் தளத்திலிருந்தே தீ பரவியிருக்கலாமென தெரியவந்துள்ளது. வணிகக்கட்டடத்தின் முதலாளி தற்போது காவல் நிலைய விசாரணையில் இருக்கிறார் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்தி: “தோனி வெளியேறினால் சிஎஸ்கே என்ன செய்யப் போகிறார்கள்?” – சோயப் அக்தர் அதிருப்திSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM