அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர்கள் இருவர் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.
சிறுநீரில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட உரத்தை நான்சி, கிறிஸ்டா ஆகிய பேராசிரியர்கள் நிக்கோலஸ் ஆர்போரேட்டம் பூங்காவில், வசந்த காலத்தில் பூக்கும் பூச்செடிகளை நட்டு வைத்து, அவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் மூலம், சுற்றுச்சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கிடைக்கும் பலன்களை அவர்கள் பார்வையாளர்களுக்கு எடுத்துக்கூறியும் வருகின்றனர்.