ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ‘Unemployment Insurance” பற்றி தெரியுமா உங்களுக்கு?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய Unemployment Insurance திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனவே அது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு?

வணிக அபாயங்களைக் குறைத்து ஊழியர்களை ஈர்த்துத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியாக, வேலையை இழக்கும் ஊழியர்கள், வேறொரு வேலைக்குச் சேரும் வரையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பண உதவியைப் பெறும் வகையில் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

வேலையின்மை காப்பீடு திட்டம்

வேலையின்மை காப்பீடு திட்டம்

2023-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வேலையின்மை காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

பிரீமியம் கட்டணம்

பிரீமியம் கட்டணம்

வேலையின்மை காப்பீடு திட்டத்தைப் பெற ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ காப்பீடு போல, 40 திரஹாம் முதல் 100 திரிஹாம் வரை பிரீமியம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

எவ்வளவு உதவி கிடைக்கும்?

எவ்வளவு உதவி கிடைக்கும்?

இந்த காப்பீட்டு திடத்திற்கான பிரீமியம் செலுத்தும் ஊழியர்களுக்கு வேலை போய்விட்டால், அவரின் 60 சதவீதம் அடிப்படை சம்பளத்தைக் குறைந்த காலத்திற்கு உதவியாகப் பெற முடியும்.

யாருக்கெல்லாம் இந்த காப்பீடு திட்டம்?
 

யாருக்கெல்லாம் இந்த காப்பீடு திட்டம்?

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு, தனியார் ஊழியர்கள் மட்டுமல்லாமல் துபாய், அபு துபாய் என எல்லா நாடுகளின் ஊழியர்களும் இந்த காப்பீடு திட்டத்தின் நன்மைகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நுழைவு விசா

புதிய நுழைவு விசா

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 80 சதவீத மக்கள் தொகை வெளிநாட்டவர்கள் தான். எனவே ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை வெளிநாட்டினருக்கான புதிய நுழைவு விசா, குடியிருப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது . அதன் மூலம் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும், தொழிலாளர் சந்தையின் கவர்ச்சியை அதிகரிப்பதற்கும், புதிய குடியிருப்பு சட்ட திருத்தம் உதவும் என கூறப்படுகிறது.

யுனிவர்சல் பேசிக் இன்கம்

யுனிவர்சல் பேசிக் இன்கம்

உலக நாடுகளும் தனி நபர்கள், வீடு இல்லாதவர்கள், மற்றும் பிறருக்கு இலவசமாகப் பணம் அளித்து உதவுவதற்கு யுனிவர்சல் பேசிக் இன்கம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளன. அதன் ஒரு படியாக இந்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Things To Know About UAE’s Unemployment Insurance For All Workers

Things To Know About UAE’s Unemployment Insurance For All Workers | ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ‘Unemployment Insurance” பற்றி தெரியுமா உங்களுக்கு?

Story first published: Saturday, May 14, 2022, 0:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.