2007-ம் ஆண்டு வாரன் பஃபெட் தனது வருமானத்தில் 18 சதவீதம் வரி செலுத்தினார். ஆனால் அவரது செயலாளர் 30 சதவீதம் வரி செலுத்தினார்.
3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு?
2007, 2011, 2018-ம் ஆண்டு இப்போது உலகின் டாப் 2 பணக்காரர்களாக உள்ள ஜெஃப் பிசோஸ், எலன் மஸ்க் இருவரும் வரியே செலுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர்கள் 160 பில்லியன் டாலர் வரை வரியை சேமிக்கிறார்கள்.
அதிக வரி செலுத்தும் ஊழியர்கள்
குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அதிக வரி செலுத்தும் நிலையில், கோடியில் சம்பளம் வாங்கும் இந்த செல்வந்தர்கள் எப்படி வரி கட்டாமல் சேமிக்கிறார்கள்?
அமெரிக்காவில் எவ்வளவு வரி
அமெரிக்காவில் சம்பளம், தினசரி ஊதியங்கள் மற்றும் போனஸ் போன்றவற்றுக்கு 37 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். ஆனால் பங்குகளுக்கு 20 சதவீதம் மட்டும் வரி செலுத்தினால் போதும். பங்குகளை விற்றால் அதற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
அன்றாட செலவுகள்
அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான நிதி தேவைக்கு அவர்கள் buy, borrow, inherit முறையைப் பயன்படுத்துகின்றனர்.
சொத்துக்கள்
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், சொத்துக்களை (பங்குகள்) வாங்கி வைத்துக்கொள்வார்கள். அதை அடைமானம் வைத்து வங்கிகளில் கடன் வாங்கிக்கொள்வார்கள். அமெரிக்காவில் வீட்டுக் கடன் வட்டிக்கு 7,50,000 டாலர் வரை மொத்தமாக வரி விலக்கு கிடைக்கும்.
பின்ன அந்த வீட்டை விற்றுவிட்டு அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். மீண்டும் ஒரு வீட்டை கடனில் வாங்குவார்கள். சுழற்சி முறையில் இப்படி பல்வேறு வகையில் திட்டமிட்டு வரியை சேமிப்பார்கள்.
இந்தியர்கள் எப்படி வரியை சேமிப்பது?
இந்தியர்கள் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு டாக்ஸ் ரிபேட் (தள்ளுபடி) உள்ளது. எனவே 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருக்கும் போது அந்த கூடுதல் தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
வரி விலக்கு
அதை குறைக்கக் காப்பீடு, வரி விலக்கு அளிக்கும் சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்தால் 1.5 லட்சம் ரூபாய் சேமித்து அதற்கான வரியைச் சேமிக்கலாம்.
வீட்டுக் கடன்
வீட்டுக் கடன் வாங்கினால் ஒவ்வொரு ஆண்டும் அதற்குச் செலுத்தும் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும்.
தேசிய பென்ஷன் திட்டம்
தேசிய பென்ஷன் திட்டத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு அப்படியே வரி விலக்கு கிடைக்கும். இப்படி பல்வேறு வகையில் திட்டமிட்டு முதலீடு செய்து வாழ்ந்தால் இந்தியாவிலும் ஒவ்வொரு ஆண்டும் சில லட்சங்கள் வரியை சேமித்து வாழலாம்.
How do American billionaires avoid paying taxes?
How do American billionaires avoid paying taxes? | அமெரிக்க கோடீஸ்வரர்கள் வரி செலுத்துவதை எவ்வாறு தவிர்க்கிறார்கள் தெரியுமா?