புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது. போர் தீவிரம் அடைந்ததையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது.
உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் இருந்து இந்திய தூதரகம் இயங்கி வந்தது. இந்த நிலையில், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வரும் 17 ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 79- நாள் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் போர் நீடித்து வருகிறது. போர் ஒருபக்கம் நடந்தாலும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சென்று அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், இந்திய தூதரகம் கீவ் நகரில் மீண்டும் செயல்பட உள்ளது.