மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 209 ரன்கள் குவித்தது .இதனை தொடர்ந்து 210 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது .
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் எடுத்தார் .இதனால் ஐபிஎல் தொடரில் 6,500 ரன்களை அவர் கடந்துள்ளார் .இதனால் ஐபிஎல் தொடரில் 6,500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார் .