ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் கலிபா பின் சயீத் காலமானார்| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபரும், அபுதாபியின் மன்னருமான ஷேக் கலிபா பின் சயீத் காலமானார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் சயீத், 73, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.எமிரேட்சின் முதல் அதிபராக, அல் நஹ்யான், 1971 – 2004 வரை பதவி வகித்தார். அவரது மறைவுக்குப் பின், 2004ல் இரண்டாவது அதிபராக, அவரது மகன் ஷேக் கலிபா பின் சயீத் பதவி ஏற்றார்.அதிபர் மறைவையொட்டி, தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. நாட்டில், 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் கலிபா மறைவுக்கு மத்திய அரசு ஒருநாள் துக்கம் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.