சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, 30 வயது முதல் 60 வயது வரையுள்ள காவலர்கள் தங்களது உடல் வெப்ப நிலை, நாடித்துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்யும் வகையில் ₹1 கோடி மதிப்பில் 14,972 ஆக்சிமீட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 150 காவலர்களுக்கு ஆக்சிமீட்டர் கருவிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.