மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் ,ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர் .வந்த வேகத்தில் தொடக்கத்தில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார் .பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டினார் .ஜோஸ் ஹேசில்வுட் வீசிய 2 வது ஓவரில் 2 சிக்ஸர் ,2 பவுண்டரி பறக்க விட்டார் .மறுபுறம் நிதனமாக விளையாடிய தவான் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் .
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 21 பந்துகளில் அரைசதம் அடித்தார் .பஞ்சாப் அணி 6 ஓவர்களில் 83 ரன்கள் குவித்தது .இதனை தொடர்ந்து பாணுகா ராஜபக்சே 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார் .
மறுபுறம் சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஷாபாஸ் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பிறகு ரன் ரேட் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் பின்னர் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார் ,அவர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு விரட்டினார் .
மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் லிவிங்ஸ்டன் அதிரடியை விடவில்ல்லை .அபாரமாக விளையாடிய லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் .
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 210 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது .
தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி 20 ரன்களிலும் ,கேப்டன் டு பிளெஸ்சிஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த்னர் .
பின்னர் வந்த மஹிபால் லொம்ரோர் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .
பிறகு ரஜத் படிதார்,கிளென் மேக்ஸ்வெல் இருவரும் இனைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர் .
படிதார் 26 ரன்களில் ஆட்டமிழந்தார் .அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் 35 ரன்களில் ஆட்டமிழந்தார் ,இதன்பிறகு வந்த தினேஷ் கார்த்திக் 11 ரன்களிலும் ,ஷாபாஸ் அகமது 9 ரன்களிலும் நடையை கட்டினர்.அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்தது அட்டமிழந்ததால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது .இதனால் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
பஞ்சாப் அணியில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்,ரிஷி தவான் ,ராகுல் சஹர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்