நீயா நானா போட்டியில் ஜியோ, ஏர்டெல்.. வோடபோனின் பரிதாப நிலை?

இந்தியாவினை பொறுத்தவரையில் பல்வேறு தொழில் துறையும் கொரோனாவின் வருகைக்கு பிற்கு பெரும் அடி வாங்கி தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளன.

ஆனால் கொரோனாவின் வருகைக்கு முன்பே, பெரும் அடி வாங்கியது தொலைத் தொடர்பு துறை தான். அதுவும் ஜியோவின் வருகைக்கு பிறகு கடும் போட்டியானது நிலவி வருகின்றது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆரம்பத்தில் புதிய வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என நினைத்த காலம் போய், இன்று இருக்கும் வாடிக்கையாளர்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டால் போதும், அதன் பிறகு புதிய வாடிக்கையாளர்கள் பற்றி யோசிக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆமா.. நாமெல்லாம் ஈஸியா பணத்தை அனுப்புறோமே.. Google Pay இதில் எப்படி பணம் சம்பாதிக்கிறது தெரியுமா?

வாடிக்கையாளார் சேர்ப்பு

வாடிக்கையாளார் சேர்ப்பு

இது குறித்து டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிய முடிகிறது. மார்ச் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 2.2 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதே ஜியோ நிறுவனம் 1.2 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இழப்பு

வாடிக்கையாளர்கள் இழப்பு

ஆனால் வோடபோன் நிறுவனம் 2.8 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதேபோல அரசு நிறுவனங்காளாக பிஎஸ்என்எல் 1.2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதே எம் டி என் எல் 3101 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.

ஜியோ தான் டாப்பு
 

ஜியோ தான் டாப்பு

ரிலையன்ஸ் ஜியோவினை விட ஏர்டெல் வாடிக்கையாளர்களை அதிகம் சேர்த்திருந்தாலும், ஜியோவே சந்தையில் முன்னிலையில் 35.37 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. இதே பார்தி ஏர்டெல் நிறுவனம் 31.55 சதவீதம் பங்கினையும், வோடபோன் 22.83 சதவீத பங்கினையும் வைத்துள்ளது. இதே பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 9.96 சதவீத பங்கினையும் மார்ச் 31, 2022 நிலவரப்படி வைத்துள்ளன.

வயேர்லெஸ் சேவை

வயேர்லெஸ் சேவை

வயேர்லெஸ் சேவையில் தனியார் நிறுவனங்கள் தான் 89.76 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் பொதுத்துறை நிறுவனத்தின் சந்தை பங்கு என்பது வெறும் 10.24 சதவீதமாகும். இது மொத்தத்தில் கால் பங்கு கூட இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது. இதிலும் ஜியோவும் ஏர்டெல் நிறுவனங்கள் தான் டாப் போட்டியாளர்களாக உள்ளன.

வயர்லைன் சேவை

வயர்லைன் சேவை

இதே வயர்லைன் வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் ரிலையன்ஸ் ஜியோ 2.8 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 83,700 வாடிக்கையாளர்களையும் சேர்த்துள்ளது. இதே வோடபோன் நிறுவனம் 14,066 வாடிக்கையாளர்களையும் சேர்த்துள்ளது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

பிராண்ட்பேன்ட் சேவை

பிராண்ட்பேன்ட் சேவை

டிராய் தரவின் படி, பிராண்ட்பேன்ட் சேவையில், ரிலையன்ஸ் ஜியோ 409.28 மில்லியன் வாடிக்கையாளார்களையும், இதே ஏர்டெல் 215.27 மில்லியன் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 122.48 மில்லியன் வாடிக்கையாளார்களையும், பி எஸ் என் எல் 27.19 வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Airtel adds 2.2 million, Reliance ji adds 1.1 million, vodafone loses 2.8 million in march month

According to TRAI, Airtel added 2.2 million customers and Jio 1.2 million customers last March, But Vodafone lost 2.8 million customers.

Story first published: Friday, May 13, 2022, 17:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.