திருப்பதி
திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுஅக்ள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி கோவிலுக்கு வருடம் தோறும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கமாகும். கொரோனா காரணமாகப் பக்தர்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் கோடை விடுமுறை காரணமாகப் பலர் திருப்பதிக்கு வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி இது குறித்து, “ஏழுமலையானை தரிsikka கோடை விடுமுறையில் வரும் ஏராளமான பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம், புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
எனவே அதிக அளவு பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியும். மேலும் பக்தர்களுக்கு உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் வழங்கப்படும். தவிர நான்கு மாடவீதிகளில் நிழற்பந்தல்கள், வெள்ளை நிற குளிர்ச்சி பெயின்ட், சிகப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இநித புத்தகம் பக்தர்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்யப்படும். இது தேவஸ்தான இணையதளத்திலும் கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.