2024 மோடி, 2026 திமுக – இது இலுமினாட்டிகள் எடுத்த முடிவு! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 13-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘3-வது முறையாக பிரதமராக விரும்பும் மோடி… யாரை முன்னிறுத்தும் காங்கிரஸ்….? எப்படி இருக்கப் போகிறது 2024 தேர்தல் களம்?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Advice Avvaiyar
ஸ்ட்ராங்கான ஆளுமைமிக்க  தலைமையின்றி காங்கிரஸ் வலுவிழந்துவிட்டது. மாநில எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ,விட்டுக் கொடுத்து ஒருவரைத் தேர்வு செய்யாத வரை, பி. ஜே.பி.தான் வரும். ஒரு சில மாநில ஆதரவை விட,,வடக்கில் பி.ஜே.பிக்கே அமோக ஆதரவு இருப்பதால், எந்தப் புது மாற்றமும் ஏற்படுவது கடினமே.
ராஜீவ், மன்மோகன் சிக்கிற்குப் பின் சக்தி வாய்ந்த தலைவர் ஒருவரேனும் வந்திருந்தால் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும். இன்னும் வாய்ப்பும் நேரமும் இருக்கு.போட்டி தவிர்த்து ஒருவரை நிறுத்த ஆட்சிமாற்றம் நிச்சயம் நடக்கும்.. திறமையான தலைமையின் கீழ் தான், எதுவும், என்றும் சிறப்பாக இருக்கும்.
சிவானன்
2024 மோடி
2026 திமுக
இதான் இழுமினாட்டிகள் எடுத்த முடிவு. நாம் ஓட்டு போடுவது எல்லாம் கண் துடைப்பு.
பிரபு கிரிஷ்
என் சாய்ஸ் மன்மோகன்சிங் தான்,ஆனா காங்கிரசில் ராகுல்காந்தியை தான் வலுகட்டாயப்படுத்தி நிறுத்துவாங்க!மோடி விருப்பம் எளிதாக நிறைவேறிடும்
image
Paul Stalin
மூன்றாவது அணி உருவாக வேண்டும். அப்போது தான் மாற்றம் வரும்.
Adav Darshan
மக்கள் மிக வேதனை சோதனையோடு இருக்காங்க, அவரை முட்டிகொடுப்பவர்கள் பெருமை படலாம், மோடியவிட்ட வேற வேட்பாளர் பஞ்சம்,மோடிக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை. Evm முறையில் ஏதேனும் நடந்தால் தான். மம்தா பானர்ஜி சரியான தேர்வு.
Nellai D Muthuselvam
2024-ஆம் ஆண்டு தேர்தல் பாஜகவுக்கு தான் சாதகமாக இருக்கும். எதிர்க்கட்சியாக காங்கிரஸின் செயல்பாடுகள் மிக மோசம். மக்களவையில் செயல்பாடுகள் சரியில்லை. பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் தொகுதிகள் பல்லாயிரம் கோடி திட்டங்களால் நிரம்பி உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியினர் கை வசம் தொகுதிகள் கூட பாஜக கூட்டணிக்கு போகாமல் இருக்க மீதமுள்ள காலத்திலாவது தங்கள் தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வர நினைக்க வேண்டும். 2024ல் காங்கிரஸ் தோற்றால் அதற்கு பிறகு பாஜக வெற்றிபெற ஒரு காரணமாக கூட காங்கிரஸ் இருக்காது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.