மதுரை சோழவந்தான் அருகே கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை பீர் பாட்டிலால் குத்திய
தந்தை கைது செய்யப்பட்டார்.
முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான முரளியின் பிளஸ் 1 படிக்கும் மகள் ராஜேஸ்வரி, ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முரளி, மகளை கண்டித்தும் அவர் கேட்காததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த முரளி, பெற்ற மகள் என்றும் பாராமல் மதுபோதையில் ராஜேஸ்வரியை பீர் பாட்டிலால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுப்பிவைத்த நிலையில் அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.