யுஏஇ புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஐக்கிய அமீரக அதிபராக இருந்தவர்
ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான்
(74). 2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக இருந்து வந்த இவர் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். இதனால் அங்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய அமீரக அதிபர் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மறைவை அடுத்து, புதிய அதிபராக ஷேக் முகமது பின் சையத் தேர்வாகி உள்ளார். ஷேக் கலீஃபா கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அவர் காலமானதை தொடர்ந்து அவரது சகோதரர் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் நாட்டின் மூன்றாவது அதிபர் என்ற ஷேக் முகமது பின் சையத் பெருமையை பெற்றுள்ளார்.

இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – 17ல் விவாதம்!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் அதிபராக பதவி வகிப்பார் என தெரிகிறது. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமீரகத்தில் ஆயுதப்படைகளின் துணை தளபதியாகவும் பணியாற்றி உள்ளார். ஆயுதப்படைகள் திட்டமிடல், பயிற்சி, பாதுகாப்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.