ஆண்களின் வழுக்கை தலை குறித்து கேலி செய்வது பாலியல் குற்றம் என பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பிரிட்டனில், யார்க்ஷயர் நகரில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு எலக்ட்ரீஷியன் பணியில் இருந்து டோனி ஃபின் என்ற ஊழியர் நீக்கம் செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தில் அவர் 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், நிறுவன உயரதிகாரி தன்னை
வழுக்கை
என்று கேலி செய்ததாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தொழிலாளர் தீா்ப்பாயத்திடம் முறையிட்டிருந்தாா்.
இந்த வழக்கை 3 பேர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் தீப்பு வழங்கிய நீதிபதிகள், இந்த அவமதிப்பு என்பது உரிமை கோருவோரின் கண்ணியத்துக்கு எதிரானது என கூறியதோடு, பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும் என தெரிவித்தது.
யுஏஇ புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு!
தீர்ப்பாயத்தின் மூன்று உறுப்பினர்கள், முடி உதிர்தல் குறித்த தங்கள் சொந்த அனுபவத்தைக் குறிப்பிட்டு, பெண்களை விட ஆண்களுக்கு வழுக்கை அதிகமாக இருப்பதாகக் கூறினர். எனவே, “வழுக்கை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது “பாலினத்தின் பாதுகாக்கப்பட்ட பண்பு” தொடர்பான அவமதிப்பாகும் என்று தெரிவித்ததோடு, 1995 ஆம் ஆண்டு வழக்கை குறிப்பிட்டு ஆணை வழுக்கை என குறிப்பிடுவது பெண்ணின் மார்பகம் குறித்து விமர்சிப்பது போன்றது என கூறியது. எனவே, டோனி ஃபின்னுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்தனா்.