‘கேஜிஎஃப் 3’ படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? – வெளியானது மாஸ் அப்டேட்ஸ்!

’கேஜிஎஃப் 3’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார், தயாரிப்பாளர் விஜய் கிரகந்த்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாய்யை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும், ‘கேஜிஎஃப் 2’ வெற்றியால் பாலிவுட் கதிகலங்கிப் போயுள்ளது. பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி2’-க்கு அடுத்த ‘டான்’ நான் என ‘கேஜிஎஃப் 2’ இரண்டாம் இடத்தைப் பிடித்து தென்னிந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. தமிழகத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரூ.100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ராக்கி பாயின் ராஜாங்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தளவிற்கு, ‘அவன் கத்தி வீசின வேகத்துல புயலே உருவாகிடுச்சி சார்’ என பில்டப் காட்சிகளால் தியேட்டரையே பிளிறிடவைத்தார் பிரஷாந்த் நீல். பில்டப் காட்சிகள் மட்டுமல்லாமல் இறுதிக்காட்சியில் ரசிகர்களை ஃபீல் செய்யவும் வைத்ததோடு மூன்றாம் பாகத்திற்கான லீடை ரவீனா டாண்டன் சொல்வதுபோல் காட்சிகள் அமைத்திருந்தார்.

image

இதனால், ரசிகர்கள் மத்தியில் ‘கேஜிஎஃப் 3’க்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விஜய் கிரகந்தர், ”இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது ‘சலார்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தற்போது, 30 சதவீத படப்பிடிப்புதான் நிறைவடைந்துள்ளது. சலாரை முடித்தப்பிறகு, ‘கேஜிஎஃப் 3’ வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதேபோல, ’ஸ்பைடர் மேன்’, ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ கதாபாத்திரங்களைப் ‘கேஜிஎஃப் 3’ படத்தினை கொண்டுவரவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.