சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.