அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் “சிந்தனை அமர்வு” மாநாட்டில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும் பலப்படுத்தவும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு யோசனைகளை முன் வைத்துள்ளனர்.
கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஏனைய தலைவர்களுடன் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது பெருமையளிப்பதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.