சாலையில் இருந்த பிச்சைக்காரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செல்வந்தர்! பெரும் கவனத்தை ஈர்த்த வீடியோ



நைஜீரியாவில் பெரும் செல்வந்தர் ஒருவர் பிச்சை எடுக்கும் பெண் தன் மீது காட்டிய கருணைக்காக பெருந்தொகை ஒன்றை பரிசாக கொடுத்த நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

டி ஜெனரல் என்பவர் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும் செல்வந்தரான இவர் சாலையில் சென்ற போது பெண்ணொருவர் பிச்சை எடுத்து கொண்டிருப்பதை கண்டார்.

உடனே அவரிடம் சென்ற டி ஜெனரல், தனக்கு பசிக்கிறது எனவும் எதாவது பணம் இருந்தால் கொடுத்து உதவுமாறும் அந்த பிச்சைக்காரியிடம் கேட்டார்.
இதையடுத்து சற்று யோசிக்காத அந்த பெண் நேற்றைய தினம் தான் பிச்சை எடுத்து வைத்திருந்த பணத்தை அப்படியே டி ஜெனரலிடம் கொடுத்தார்.


இதற்கு நன்றி சொன்ன டி ஜெனரல், நன்றி அம்மா, இந்த பணத்தை வைத்து நான் சாப்பிடுவேன் என கூறினார்.
இதன்பின்னர் பிச்சை எடுத்த பெண்ணின் கருணை உள்ளத்தை நினைத்து நெகிழ்ந்து போனார் டி ஜெனரல்.

பின்னர் அவர் அருகே சென்ற டி ஜெனரல், நான் நல்லவர்களை கண்டுபிடிக்கவே இப்படி செய்தேன் என கூறி பிச்சைக்காரி தந்த பணத்தை திரும்பி அவரிடமே கொடுத்தார்.

மேலும் தனது கையில் இரண்டு பணக்கட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார் டி ஜெனரல்.
அதில் ரூ 90,000 (இலங்கை மதிப்பில்) அளவுக்கு பணம் இருந்தது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதனை பார்த்த பலரும், அன்பு தான் எல்லாம், உங்கள் இருவர் செயலும் பாராட்டுதல்குரியது என பதிவிட்டுள்ளனர்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.