ஊராட்சி செயலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் நாராயண குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஆண் குழந்தையும் உள்ளது. ராஜசேகர் அந்த கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று அவர் அவரது அறையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராஜசேகர் தற்கொலைக்கு முன்பாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் . ஒன்றிய கவுன்சிலர் தான் தற்கொலைக்கு காரணம் எனவும் தனது தம்பிக்கு குமாருக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.
மேலும், பட்டாசு வளர்ச்சி அழுதுவிடுவேன் சொல்லி ஊராட்சி செயலர் பதவியில் இருந்து தூக்கி விட்டுவேன் என மிரட்டி வந்ததார். எனக்கு தொடர்ந்து போன் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். நண்பர்களோ உறவினர்களோ அரசு ஊழியர்களுக்களொ எனது தற்கொலைக்கு காரணம் அல்ல.ஒன்றிய கவுன்சிலர் தான் காரணம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஊராட்சி செயலர் தற்கொலைக்கு காரணமான ஒன்றிய கவுன்சிலர் ஹரியை கைது செய்யக்கோரி இந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.