டிவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ பராக் அகர்வால் முக்கியமான நிர்வாக மாற்றங்களை அடுத்தடுத்து எடுத்து வரும் நிலையில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார்.
இதற்குப் பதிலடியை டிவிட்டர் பதிவு வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை.. எங்கு, எப்போது. தொடங்கப்படும்?
எலான் மஸ்க்
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினால் முதல் ஆளாக வெளியேறுவது சிஇஓ பராக் அகர்வால் தான், இல்லையெனில் சிஇஓ பதவியில் இருந்து இறக்கப்பட்டுப் பிற பதவிகளில் அமர்த்தப்படுவார் என்பது 90 சதவீதம் உறுதியாகியுள்ளது.
டிவிட்டர்
இந்த நிலையிலும், சிஇஓ-வாகச் சில உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது, நிர்வாகச் சீர்திருத்தம் செய்வது எனப் பல மாற்றங்கள் டிவிட்டர் நிறுவனத்தில் நடந்து வருகிறது.
பராக் அகர்வால்
பராக் அகர்வாலின் செயல்பாடுகளை டிவிட்டர் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் முதலீட்டு சந்தையைச் சேர்ந்தவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பராக் நேற்று இரவு டிவிட்டரில் பல பதிவுகளைச் செய்தார்.
பராக் டிவீட்
கடந்த சில வாரங்களாக நிறைய நடந்துள்ளது. நான் நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன், இந்த நேரத்தில் அதிகம் வெளிப்படையாகச் சொல்லவில்லை, ஆனால் இப்போது சொல்கிறேன்.
மாற்றங்கள்
எங்கள் தலைமைக் நிர்வாகக் குழு மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களை நேற்று அறிவித்தோம். மக்களைப் பாதிக்கும் மாற்றங்கள் எப்போதும் கடினமானவை. டிவிட்டர் எப்படியும் கையகப்படுத்தப்படும் நிலையில் ஏன் “நொண்டி-வாத்து” சிஇஓ இந்த மாற்றங்களைச் செய்கிறார் என்று சிலர் கேட்கிறார்கள்.
தயாராாக இருத்தல் முக்கியம்
டிவிட்டரை கையகப்படுத்தும் ஒப்பந்தம் விரைவில் முடிவடையும் என்று நானும் எதிர்பார்க்கிறேன், எல்லாச் சூழ்நிலைகளுக்கும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும் மற்றும் எப்போதும் ட்விட்டருக்கு சரியானதைச் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
என்னுடைய பொறுப்பு
ட்விட்டரை முன்னின்று நடத்துவதற்கும் இயக்குவதற்கும் நான் பொறுப்பாளியாக இருக்கிறேன், மேலும் ஒவ்வொரு நாளும் வலுவான ட்விட்டரை உருவாக்குவதே எங்கள் வேலை.
டிவிட்டர் தான் முக்கியம்
நிறுவனத்தின் எதிர்கால உரிமையாளர், வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், பங்குதாரர்கள் என எதையும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் டிவிட்டர் ஒரு மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு மற்றும் வணிகமாக இருக்க வேண்டும் எனப் பணியாற்றுகிறோம்.
போலி கணக்குகள் பிரச்சனை
டிவிட்டர் தளத்தில் போலி கணக்குகளைக் குறித்த முழுமையான விபரம் தெரியும் வரையில் இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் தற்காலிகமாக நிறுத்து வைக்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தது மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டிவிட்டர் பங்குகள் அதிகப்படியாக 20 சதவீதம் வரையில் சரிந்தது. இதைக் காரணம் காட்டி டிவிட்டரின் 44 பில்லியன் டாலர் டீல் தடை பெறாது ஆனால், விலையைக் குறைக்க முடியும்.
Parag Agrawal criticize as lame-duck CEO; Responds in Twitter
Parag Agrawal criticize as lame-duck CEO; Responds in Twitter நான் என்ன வாத்தா..? கடுப்பான பராக் அகர்வால்..!! #Twitter