வீட்டுக்குள் வந்த பாம்பைப் பார்த்ததும் சாமியாடி ”ஏன் என் வீட்டுகுள் வந்தாய்?” என்று கேள்வி கேட்ட பெண்ணால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் பாம்புகள் அவ்வப்போது குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. இதனை வனத்துறையும் மீட்டு வனப்பகுதியில் கொண்டுசென்று பாதுகாப்பாக விட்டுவருகிறது. ஆனாலும் உணவு பற்றாக்குறை மற்றும் கடுமையான வெயில் காரணமாக பல பாம்புகள் குடியிருப்புகளுக்குள் வந்து விடுக்கிறது. அப்படி பாம்பு ஒன்று ஒரு வீட்டிற்குள் வந்ததையறிந்து அந்த பாம்பை பிடிக்க வனத்துறையினர் வந்திருக்கின்றனர்.
அப்போது அந்த பாம்பை பார்த்து அந்த வீட்டில் இருந்த பெண்ணொருவர், ’’ஏன் என் வீட்டுக்குள் வந்தாய்? நீ வரக்கூடாது என நாங்கள் சத்தியம் வாங்கி இருக்கிறோம். அதை மீறி ஏன் வந்தாய்?’’ என சாமியாடி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் படமெடுத்து ஆடிய பாம்பை பக்குவமாக பிடித்துச்சென்று வனப்பகுதியில் விட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM