திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு; பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்த நிலையில் ஒருமனதாக தேர்வு

திரிபுரா: திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்ததால் மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிப்லப் குமார் தேப் அம்மாநில ஆளுநரிடம் அளித்திருந்தார். இவரது ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் புதிய முதலமைச்சர் தேர்தெடுப்பார்கள் என தகவல் கூறப்பட்டது. பிப்லப் குமார் தேப் பல சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக தொடர கூடாது என்ற கருத்தை தலைமைக்கு தெரிவித்ததை, தொடர்ந்து பிப்லப் குமார் தேப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் திரிபுரா தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மாணிக் சாஹா மாணிக் சஹா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபுராவில் 2021 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் 13 உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜகவின் வெற்றிக்கு மாணிக் சாஹா பெரும் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.  பாஜகவின் திரிபுரா மாநிலத்தின் தலைவராக பிப்லப் குமார் தேப் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.