திரிபுரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
திரிபுரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணாமாக பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும் இணைந்தனர். இந்த சூழலில் அந்த மாநில முதல்வர் ராஜினாமா செய்திருக்கிறார். தற்போதைய திரிபுரா முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று நடைபெறவிருப்பதாக தெரிகிறது.
திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.