நாமக்கல் ராசிபுரத்தில் விசைத்தறிப்பட்டறையில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளிகள் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
வி.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான பட்டறையில் வழக்கம் போல தொழிலாளர்கள் 5 பேர் வேலை செய்து வந்தனர்.
அப்போது திடீரென அடுத்தடுத்திருந்த 10 விசைத்தறிகளிலும் மின்சாரம் பாய்ந்ததில், தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.