ஈரோடு அருகே வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் கடுமையாக தாக்கியதாக, பாதிக்கப்பட்டவரின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி சாலை பகுதியில் சண்முகம் என்பவர் தனது மனைவி மாரியம்மாள் உடன் வசித்து வருகிறார்.
கூலித் தொழிலாளியை சண்முகம், பெரிய வட்டம் பகுதியில் பிரவீன் என்பவரின் தாயாரிடம் வட்டிக்கு 6000 ரூபாய் வேறு ஒருவருக்கு வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரவீன் உள்ளிட்ட சிலர் சண்முகத்தின் வீட்டுக்கு சென்று அவரையும் அவரது மனைவியும் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அங்கு வந்த பிரவீன் மற்றும் அவரின் உறவினர்கள், கடன் தொகையை கொடுக்கும்படி மீண்டும் மிரட்டி சென்றுள்ளனர்.
இதனால் பெரும் வேதனை அடைந்த மாரியம்மாள், நடந்த விவரங்களை வீடியோவாக பதிவிட்டு, இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.