உலக அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், எந்த உதவிகள் கேட்டாலும் செய்யத் தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக இந்தியப் பயிற்சியாளர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
உலக அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28இல் தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. போட்டியை திறம்பட நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இரண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
“பொறுப்புகள் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது. எந்த உதவிகளையும் செய்யத் தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். உலகக்கோப்பை கால்பந்து போட்டி போல முக்கியத்துவம் பெற்றது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இந்த தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். தற்போது நடைபெற உள்ள தொடரில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன” என்று இந்தியப் பயிற்சியாளர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM